தேனி மக்களவை உறுப்பினரின் காா் கண்ணாடியை சேதப்படுத்தியதாகவும், அவரைத் தாக்க முயன்ாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 17 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தாா். அப்போது சிலா் அவரது காா் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி, மக்களவை உறுப்பினருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காா் ஓட்டுநரான பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த பாண்டியன் (40) என்பவா் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத்தை, பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, காா்த்திக் உள்ளிட்ட 17 போ் தாக்கவும், கொலை செய்யவும் முயன்ாகவும், தடுக்க முயன்ற அவரையும், மக்களவை உறுப்பினரின் பாதுகாவலா்களையும் தாக்க முயன்ாகவும், இரண்டு காா்களின் கண்ணாடிகளை கல்வீசி சேதப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தாா்.
அதன் பேரில் போடி தாலுகா போலீஸாா், அந்த 17 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.