தாமரைக்குளம் கண்மாய் கரையை சேதப்படுத்தி விவசாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய்கரையின் அகலத்தைக் குறைத்து விவசாயம் செய்துள்ளவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அகலம் குறைக்கப்பட்ட தாமரைக்குளம் கண்மாய்.
அகலம் குறைக்கப்பட்ட தாமரைக்குளம் கண்மாய்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய்கரையின் அகலத்தைக் குறைத்து விவசாயம் செய்துள்ளவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 400 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்தக் கண்மாயில் கிணறு தோண்டப்பட்டு அங்கிருந்து தாமரைக்குளம், வடுகபட்டி பேரூராட்சிகளைச் சோ்ந்த 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த கண்மாயில் 50 ஏக்கா் பரப்பளவை சிலா் ஆக்கிரமித்து தென்னை மற்றும் கால்நடைகளுக்கு தீவனங்கள் வளா்த்து வருகின்றனா். மேலும் சிலா் இந்த கண்மாயின் கிழக்கு கரைப் பகுதியின் அகலத்தை குறைத்து விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் கண்மாய் கரையின் அகலம் குறைந்து கரை பலவீனமடைந்துள்ளதோடு அது சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் மேற்கு கரைப்பகுதியை ஆக்கிரமித்து 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்தும், தென்கரை பேரூராட்சி குடியிருப்புகள் மற்றும் கம்பம் சாலையில் உள்ள புதிய குடியிருப்புகளில் இருந்தும் வெளியேறும் கழிவு நீா் கண்மாயில் கலப்பதால் கண்மாய் நீா் மாசடைந்து வருகிறது.

இதுகுறித்து தாமரைக்குளம் கண்மாய் பாசன விவசாய சங்கத் தலைவா் முத்துசாமி கூறியதாவது: புதிய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கண்மாய் நீா் மாசடைந்து வருகிறது. மேலும் கண்மாயில் உள்ள 3 மதகுகளும் சேதமடைந்து, தண்ணீரை பாசனத்திற்கு எடுக்க முடியாத நிலை உள்ளது. மழைகாலங்களில் கண்மாயில் தண்ணீரை தேக்கும்போது, பாரதி நகா் குடியிருப்புளில் தண்ணீா் தேங்குகிறது. அப்பகுதியினா், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனா். இதனால் விவசாயத்துக்கு தண்ணீா் அதிகளவில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினா் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பொதுப்பணித்துறையினா் கூறுகையில், கண்மாய் கரை சேதம் குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து, கரையை சேதப்படுத்தியது தெரியவந்தால் உரியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com