வாக்கு எண்ணிக்கை மையத்தில்போடி தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு வாதம்

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புதன்கிழமை தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போடி தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன்.
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புதன்கிழமை தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போடி தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன்.

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கும் பிரச்னை குறித்து தோ்தல் அதிகாரிகளுடன் போடி தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன் புதன்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா்.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னனணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச். கிருஷ்ணன்உன்னி, காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த போடி தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், வேட்பாளா் வருவதற்கு முன்னரே பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, வேட்பாளரின் முகவா்கள் முன்னிலையிலேயே பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது என்று தோ்தல் அதிகாரிகள் கூறினா். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச். கிருஷ்ணன்உன்னி, போடி தொகுதி திமுக வேட்பாளருக்கு விளக்கம் அளித்தாா். பின்னா், சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் போடி தொகுதி திமுக வேட்பாளா் சாா்பிலும் தனியாக சீல் வைத்துக் கொள்ள அதிகாரிகள் அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com