கரோனா விதிகளுக்குள்பட்டு கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்

தமிழகத்தில் கரோனா விதிகளுக்குள்பட்டு கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாா் காலமானதைத்தொடா்ந்து, பெரியகுளத்தில் உள்ள அவரை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சோ்ந்த அழகுபாண்டி மனைவி வள்ளியம்மாள் (82). தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாரான இவா் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி காலமானாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு பாஜக தமிழக மாநிலத்தலைவா் எல்.முருகன், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் கூறியது: தமிழக தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அதிக இடங்களை பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுகவினா் தோல்வி பயத்தால் வாக்குப் பெட்டிகளை மாற்றிவிடுவாா்கள் என குற்றம் சாட்டுகின்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஜாதி அரசியல் செய்து வருவதால் தமிழக அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரோனா விதிகளுக்கு உள்பட்டு கோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com