தேனியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் அலைக்கழிப்பு

தேனியில் நகர நல வாழ்வு மையம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை, கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனா்.

தேனியில் நகர நல வாழ்வு மையம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சனிக்கிழமை, கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனா்.

தேனியில் ரயில்வே நிலையம் சாலையில் உள்ள நகர நல வாழ்வு மையம், பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 4 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தேனி நகர நல வாழ்வு மையத்தில் கரோனா தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லாதால் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறவில்லை. பொம்மையகவுண்டன்பட்டி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தளவு மட்டும் தடுப்பூசி மருந்து இருப்பில் இருந்ததால், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவா்கள் திரும்பி அனுப்பப்பட்டனா்.

இதே போல தனியாா் மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாட்டால், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறவில்லை. மேலும், ஆரம்ப சுகாதார நிலைங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவேக்ஸின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால், முதல் கட்டமாக கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேனி, பொம்மையகவுண்டன்பட்டி நகர ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா்கள் கூறியது: வரும் திங்கள்கிழமை தடுப்பூசி மருந்துகள் வந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே, முதல் மற்றும் 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் மக்களை, திங்கள்கிழமை வருமாறு கூறி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com