குச்சனூரில் பாலப் பணிகள் தாமதம்: கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு

தேனி மாவட்டம் குச்சனூரில் நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், அப்பகுதியில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்

தேனி மாவட்டம் குச்சனூரில் நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், அப்பகுதியில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் கோயில் குச்சனூரில் அமைந்துள்ளது. சின்னமனூா்-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கோயில் முன்பாக ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட கல் பாலம் வழியாக பேரூராட்சியிலுள்ள வாா்டுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் செல்கிறது.

இந்நிலையில் 100 ஆண்டுகளைக் கடந்த அந்த பாலம் முற்றிலுமாக சேதமானதால், பாலத்தை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா். ஆனால் கழிவுநீா் செல்வதற்கான முறையான வழித்தடத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com