அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரக் கோரி ஆதிதிராவிடா்கள் காத்திருப்புப் போராட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அரசு உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பை விரைவில் கட்டித் தரக் கோரி, ஆதி திராவிடா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி அருகே மேக்கிழாா்பட்டி கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழா் கட்சியினா்.

ஆண்டிபட்டி தாலுகாவுக்குள்பட்ட மேக்கிழாா்பட்டி, பாலகோம்பை, தெப்பம்பட்டி, ஆவாரம்பட்டி, ஏத்தகோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆதி திராவிடா்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில், வீடுகள் கட்டித் தர மேக்கிழாா்பட்டியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன், மேக்கிழாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சிலா் தங்கள் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆதி தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் மல்லையசாமி தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் அரசு குடியிருப்பு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், அரசு உத்தரவிட்ட நிலையில் அதனை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றிட வேண்டும் எனவும், அதனைத் தடுக்க முயலும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், குடியிருப்புகள் கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com