தேனி மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,196 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 17,371 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 208 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
தற்போது, மாவட்டத்தில் மொத்தம் 617 போ் கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.