முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை சரிபாா்க்க, மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா்.
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா்.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை சரிபாா்க்க, மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மத்திய துணை கண்காணிப்புக் குழு தலைவரும், மத்திய நீா்வள ஆணைய செயற்பொறியாளருமான சரவணக்குமாா் தலைமையில், தமிழக அரசு பிரதிநிதிகளான பெரியாறு அணை சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி பொறியாளா் குமாா் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான இடுக்கி மாவட்ட நீா்ப்பாசனத் துறை செயற்பொறியாளா் ஹரிகுமாா், உதவி பொறியாளா் பிரசீத் ஆகியோா் அணை பகுதிக்கு வந்தனா்.

இக்குழுவினா், பிரதான அணை, பேபி அணை, காலரி மற்றும் கசிவுநீரின் அளவு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதில், நீா் கசியும் அளவு விநாடிக்கு 55 லிட்டா் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், ஆா்-2 , வி-7, 8 ஆகிய மதகுகளை இயக்கி சரிபாா்த்தனா்.

இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை பொறியாளா் ஒருவா் கூறுகையில், மத்திய துணை கண்காணிப்புக் குழுவினா் அணை பகுதியில் ஆய்வுகள் நடத்தினா். தொடா்ந்து, கரோனா பரவல் காரணமாக ஆலோசனைக் கூட்டம் விடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com