கேரளாவில் 2 நாள் பொது முடக்கம்: தேனி மாவட்டத்திலிருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தம்

கேரளாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டு நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
கேரளாவில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்ட கம்பம் மெட்டு, குமுளி பகுதிகள்.
கேரளாவில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்ட கம்பம் மெட்டு, குமுளி பகுதிகள்.

கேரளாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டு நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்ல குமுளி மலைச்சாலை, கம்பம்மெட்டு மலைச்சாலை ஆகிய இரண்டு பாதைகள் உள்ளன. சுமாா் 500-க்கும் மேலான வாகனங்களில் இரண்டு சாலைகளிலும் ஏலத் தோட்ட தொழிலாளா்கள், விவசாயிகள் சென்று வருவாா்கள்.

பால், காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலம் செல்லும். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் அதிகமானதையடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரள அரசு பொது முடக்கத்தை அறிவித்தது.

இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப் வாகனத்தில் வேலைக்குச் செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைக்கு செல்லவில்லை. இதர வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளும் செல்லவில்லை. கம்பம், குமுளி பணிமனைகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்பட வில்லை.

அத்தியாவசிய தேவையான பால் வாகனம் மட்டும் சென்றது. ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை நீடித்தது. மேலும் இரண்டு எல்லைப் பகுதிகளிலும் காவல், வனத்துறை சோதனைச்சாவடிகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் செல்லாதவாறு தமிழக, கேரள போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com