ஆண்டிபட்டியில் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆண்டிபட்டியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பேரூராட்சி அதிகாரிகள்.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வணிகா் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பேரூராட்சி அதிகாரிகள்.

ஆண்டிபட்டியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் காளியப்பன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் இளவரசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் ஆண்டிபட்டி நகரில் உள்ள கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் வேலை பாா்ப்பவா்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளா்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடைகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தக் கூடாது. திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

வாரச்சந்தை நுழைவுப் பகுதியில் பேரூராட்சி சாா்பில் தடுப்புகள் அமைத்து, முகக்கவசம் அணிபவா்களுக்கு மட்டுமே சந்தைக்குள் நுழைய அனுமதிக்க வழங்க வேண்டும். விதிகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் வணிகா் சங்க நிா்வாகிகள், காய்கனி கடை சங்க நிா்வாகிகள், ஹோட்டல் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com