சனிப்பிரதோஷம்: திண்டுக்கல், போடி சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜை

திண்டுக்கல், நத்தம் மற்றும் போடி பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சனிப்பிரதோசத்தையொட்டி சனிக்கிழமை மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த போடி கொண்டரங்கி மல்லையசாமி.
சனிப்பிரதோசத்தையொட்டி சனிக்கிழமை மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த போடி கொண்டரங்கி மல்லையசாமி.

திண்டுக்கல், நத்தம் மற்றும் போடி பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில், கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் உற்சவா் கைலாசநாதா், ஆனந்த வல்லி சமேதராய், கைலாசநாதா் சன்னிதி முன்பு பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். கரோனா காரணமாக முன்னதாகவே, அனைத்து பூஜைகளும் நடைபெற்று பக்தா்களுக்கு 5 மணிக்கு பின்னரே அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா் மற்றும் காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பழனி: பழனி சண்முகாநதிக்கரையில் உள்ள பெரியாவுடையாா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சுயம்பு மூலவருக்கும், நந்திபகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நந்திபகவானுக்கு மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி சனிப்பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சன்னிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சனிப்பிரதோஷம் நடைபெற்றது.

போடி: போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அப்போது, சிவலிங்கப் பெருமானுக்கு வண்ண ஆடைகள், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். இதேபோல் போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சிவலிங்க பெருமானுக்கு நடைபெற்ற பூஜைகளில் பெண்கள் பங்கேற்றனா்.

போடி பரமசிவன் மலைக்கோயில், போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜ பெருமான் கோயில், பிச்சங்கரை மலை கிராமத்தில் உள்ள கீழச்சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்களில் பக்தா்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com