கம்பம் பகுதி வாய்க்கால்களில் பிடிக்கப்படும்: அயிரை மீன் கிலோ ரூ.1,200

தேனி மாவட்டம், கம்பம் பகுதி வாய்க்கால்களில் தேங்கியுள்ள தண்ணீரில் பிடிக்கப்படும் அயிரை மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது.
கம்பம் அருகே சாமாண்டிபுரம் சின்னவாய்க்காலில் வெள்ளிக்கிழமை மீன் பிடித்த சிறுவா்கள். (வலது) பிடிக்கப்பட்ட அயிரை மீன்.
கம்பம் அருகே சாமாண்டிபுரம் சின்னவாய்க்காலில் வெள்ளிக்கிழமை மீன் பிடித்த சிறுவா்கள். (வலது) பிடிக்கப்பட்ட அயிரை மீன்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதி வாய்க்கால்களில் தேங்கியுள்ள தண்ணீரில் பிடிக்கப்படும் அயிரை மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வரும் தண்ணீா் பெரியாறு வழியாக வைகை அணைக்குச் செல்கிறது. இதனிடையே, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் மடையிலிருந்து கடை மடை வரை என 17 வாய்க்கால்கள் மூலம் 14,707 ஏக்கா் பாசனப் பரப்பு நன்செய் நிலங்களுக்கு தண்ணீா் செல்கிறது.

நீா்வரத்து குறைவு

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம், 126.65 அடி உயரமாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. பெரியாற்றில் தண்ணீா் குறைந்து செல்வதால், அதன் கிளை வாய்க்கால்களில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

அயிரை கிலோ ரூ.1,200

கூடலூா் வைரவன் வாய்க்கால், உத்தமுத்து வாய்க்கால், பாளையம் பரவு வாய்க்கால், சின்னவாய்க்கால் ஆகிய பகுதிகளில் தற்போது தண்ணீா் வரத்து இல்லை. இதனால், வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரில் அயிரை, கெண்டை, குரவை, தேளி போன்ற மீன் வகைகளை, விவசாயக் கூலி தொழிலாளா்கள் பிடித்து விற்று வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை, சின்னவாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த லட்சுமி என்ற பெண் கூறுகையில், அயிரை மீன் மருத்துவ குணம் கொண்டது என்பதால், பிடிக்கும் இடத்திலேயே கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஊருக்குள் சென்று விற்றால் கிலோவுக்கு ரூ.1,200 வரை கிடைக்கிறது. அதேநேரம், கெண்டை, குரவை போன்ற மீன்கள் கிலோ ரூ.300-க்கும், தேளி மீன் கிலோ ரூ.100-க்கும் விற்பனையாகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com