குடும்பத் தகராறு: கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத் தகராறு காரணமாக கூலி தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத் தகராறு காரணமாக கூலி தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கூடலூா் 5 ஆவது வாா்டில் முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் பாலன் (46). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், பாலன் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, மனைவியுடன் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாலன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாராம்.

வெள்ளிக்கிழமை காலை, மயானப் பகுதியில் மரத்தில் ஒருவா் சேலையால் தூக்கிட்ட நிலையில் கிடப்பதைக் கண்டவா்கள் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் மற்றும் போலீஸாா் சம்பவத்துக்கு இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது கூலி தொழிலாளி பாலன் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com