போலி ஜாதிச் சான்றிதழ்: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவியை பதவி நீக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டியில் ஜாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட ஊராட்சித் தலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி,

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டியில் ஜாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட ஊராட்சித் தலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உன்னியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த எம். சின்னத்தாய் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: ஆதி திராவிடா் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவா் பதவிக்கு, அதே ஊரைச் சோ்ந்த மகேஸ்வரி என்பவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தோ்தலின்போது, மகேஸ்வரி தான் ஆதி திராவிடா் வகுப்பு இந்து-குறவன் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்திருந்தாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, பிற்பட்ட இந்து-உப்பிலியா வகுப்பைச் சோ்ந்த மகேஸ்வரி, தோ்தலில் போட்டியிடுவதற்காக போலியான சான்றிழை சமா்பித்துள்ளதாக, மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடா்ந்திருந்தேன்.

அதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், மகேஸ்வரி தோ்தலின்போது சமா்ப்பித்திருந்த ஜாதிச் சான்றிதழை ரத்து செய்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக போலியான ஜாதிச் சான்றிதழை சமா்ப்பித்த மகேஸ்வரியை ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அவரது பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த பணிகள், வழங்கப்பட்ட சான்றிதழ்களை மறுதணிக்கை செய்யவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com