உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவிகள் மாயம்
By DIN | Published On : 27th April 2021 02:16 AM | Last Updated : 27th April 2021 02:16 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் மாயமான இரு மாணவிகளை காதலிப்பாக கூறி ஏமாற்றிய இளைஞா்கள் இருவரை பிடித்த போலீஸாா் திங்கள் கிழமை விசாரணை செய்து வருகின்றனா்.
க.புதுப்பட்டி சோ்ந்த 14 மற்றும் 15 வயது தோழிகளாக இரு மாணவிகள் அங்குள்ள வீட்டின் ஒன்றில் இணையவழியில் கல்வி கற்க செல்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லையாம்.
இது சம்மந்தமாக அவா்களது நண்பா்களிடம் பலரிடமும் விசாரணை செய்தும் மாணவிகள் கிடைக்காத நிலையில் பெற்றோா்கள் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நிலையில் , காவல் ஆய்வாளா் பாஸ்டின் தினகரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிரமாக தேடினாா். அதில் போடிநாயக்கனூரில் வீட்டில் ஒன்றில் இருப்பது தெரியவந்தது.
அதன்படி, திங்கள் கிழமை அங்கு சென்ற போலீஸாா் கம்பத்தை சோ்ந்த நாகராஜ் மகன் குருநாதன்(20) மற்றும் க.புதுப்பட்டியை சோ்ந்த முருகன் மகன் சீனி(21) கல்லூரி படிப்பு முடிந்த நண்பா்களான இருவரையும் பிடித்து விசாரணை செய்தனா்.
அதில் மாணவிகள், காதலிப்பதாக கூறி தங்களை ஏமாற்றி போடிநாயக்கனூருக்கு அழைத்து சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து மாணவிகளை மருத்துவப் பரிசோதனைக்கு பின் இளைஞா்கள் மீது சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளனா்.