கம்பத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் இளைஞா் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் 5 மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் 5 மாதங்களுக்கு பின்னா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் கூடலூா் சாலையில் நந்தனாா் காலனியில் லோகநாதன் என்பவா் வசித்து வருகிறாா். கடந்த டிச. 23 ஆம் தேதி லோகநாதன் மகனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இதையடுத்து லோநாதன் குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை கம்பம் - கூடலூா் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடந்து வந்த இளைஞா் ஒருவா் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பி ஓடவே, விரட்டி பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், காமாட்சிபுரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் சக்திவேல் (23) என்பதும், நந்தனாா் காலனியில் லோகநாதன் வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 7 பவுன் தங்க நகைகளை மீட்டு உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் தப்பி ஓடிய அவரது அண்ணனையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com