உத்தமபாளையத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலையோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அனுமந்தன்பட்டி சாலையில் வியாழக்கிழமை விழுந்த தென்னை மரம்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனால், உத்தமபாளையத்தில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை உத்தமபாளையம் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. மேலும் இந்த மழை மானாவாரி விவசாயத்துக்கு ஏற்ாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியதால் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி , ராயப்பன்பட்டி, மேகமலை போன்ற பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனால் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com