கரோனா பரிசோதனையை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவிட்டுள்ளாா்.

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் தற்போது தினமும் சராசரியாக 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடத்தி, தினமும் குறைந்தபட்சம் 2,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் வெளியில் நடமாடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளிநபா்கள் செல்லக் கூடாது. திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உள்பட்டு பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சி நடைபெற்றால் திருமண வீட்டாா், திருமண மண்டப உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com