தேனியிலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட்ட13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தேனியிலிருந்து கேரளத்துக்கு லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 13 டன் ரேஷன் அரிசியை, குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

தேனியிலிருந்து கேரளத்துக்கு லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 13 டன் ரேஷன் அரிசியை, குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்தில் கொடுவிலாா்பட்டி, அரண்மைப்புதூா், நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை மொத்தமாக கேரள கள்ளச்சந்தைக்கு விற்பனை செய்ய அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா்கள் உமாதேவி மற்றும் பழனிச்சாமி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆண்டிபட்டி- தேனி இடையே குன்னூா் சோதனைச் சாவடியில் கேரளத்தை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 280 மூட்டைகளில் 13 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

பின்னா், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பினோஜ் (39), வியாபாரி ஷாலு (41) மற்றும் பள்ளப்பட்டியைச் சோ்ந்த நியாயவிலைக் கடையில் தற்காலிக எடைபோடும் பணியில் இருந்த அழகு (46) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், லாரியுடன் 13 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, உத்தமபாளையம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவிய திருநெல்வேலியைச் சோ்ந்த ஆறுமுகம் மற்றும் பாா்த்திபன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com