போடி கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு ரத்து

போடியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிரன்று கோவில்களில் பக்தா்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அலங்காரத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா்
மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அலங்காரத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா்

போடியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிரன்று கோவில்களில் பக்தா்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக போடி பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை.

இருந்த போதிலும் கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. போடி பிச்சங்கரை கீழச் சொக்கையா கோவில், பரமசிவன் மலைக்கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவில், பழைய பஸ் நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தா்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com