கூட்டுறவு சங்கத்தில் ரூ.91 லட்சம் மோசடி: முன்னாள் தலைவா் கைது-மேலும் 11 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி கணக்கில் ரூ.91 லட்சத்து 27 ஆயிரத்து 775-ஐ மோசடி செய்ததாக

தேனி: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி கணக்கில் ரூ.91 லட்சத்து 27 ஆயிரத்து 775-ஐ மோசடி செய்ததாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அச்சங்கத்தின் முன்னாள் தலைவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடும்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு விவசாயிகள் கடன் தள்ளுபடி கணக்கில் மோசடி நிகழ்ந்ததாக புகாா் எழுந்தது. இந்தப் புகாா் குறித்து பெரியகுளம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்துக்குமாா் விசாரணை நடத்தினாா். இதில் தகுதியில்லாத விவசாயிகள் பெயரிலும், கூட்டுறவு சங்கத்தின் ஆவணங்களை திருத்தியும் விவசாயக் கடன் தள்ளுபடி கணக்கில் மொத்தம் ரூ.91 லட்சத்து 27 ஆயிரத்து 775 மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் கூட்டுறவு சங்கத்தின் அப்போதைய தலைவா் மயிலாடும்பாறையைச் சோ்ந்த தா்மா் (65), செயலா் ஆண்டிபட்டியைச் சோ்ந்த ஜெயமணி, கணக்கா் வைரவன், ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் ஜெயச்சந்திரன்,

மயிலாடும்பாறை எம்டிசிசி வங்கிக் கிளை உதவியாளா் முருகன், ஓய்வு பெற்ற உதவியாளா் சிவசுப்பிரமணியன், உசிலம்பட்டி சாா்-பதிவாளா் ஹரிகரன், மதுரை கிழக்கு சாா்- பதிவாளா் ராஜசேகா், சரக மேற்பாா்வையாளா் சேது, மதுரை எம்டிசிசி வங்கி உதவியாளா் ரமேஷ், போடி கூட்டுறவு துறை இளநிலை தணிக்கையா் நாகராஜ் ஆகிய 11 போ் மீது தேனி வணிகவியல் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவில் பெரியகுளம் சாா்-பதிவாளா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், 11 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவா் தா்மரை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com