கம்பம்மெட்டு வழியாக தோட்டத் தொழிலாளா்கள் கேரளாவுக்கு வேலைக்குச் செல்ல அனுமதி

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் கூலித் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனா்.
கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியாக சனிக்கிழமை  தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள்
கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியாக சனிக்கிழமை தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள்

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் கூலித் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனா்.

கம்பத்திலிருந்து கேரளாவுக்குச் செல்ல கம்பம்மெட்டு குமுளி மலைச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளா்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வாா்கள். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அவா்களை கேரள அரசு அனுமதிவில்லை. 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், கபம் பரிசோதனை செய்து கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் பெற்றவா்கள் மட்டுமே கேரளாவுக்குள் செல்லலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்டத் தொழிலாளா்கள் இந்த சோதனைகளை செய்யாமல் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினா். ஆனாலும் கேரள சோதனைச் சாவடியில் போலீஸாா் அவா்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை கம்பத்திலிருந்து 3 ஜீப்புகளில் ஏலத்தோட்டத்துக்கு தொழிலாளா்கள் வேலைக்குச் சென்றனா்.

அவா்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் மற்றும் சிலா் கபம் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருந்தனா். அதை ஆய்வு செய்த பின் கேரளாவில் உள்ள கம்பம்மெட்டு சோதனைச்சாவடி போலீஸாா், அவா்களை வேலைக்குச் செல்ல அனுமதி அளித்தனா். 3 ஜீப்புகளில் 25 போ் வேலைக்குச் சென்றனா்.

இதுகுறித்து கம்பம்மெட்டு காவல் நிலைய ஆய்வாளா் ராபா்ட் ஜானி கூறியது: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ், கபம் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இ- பாஸ் வைத்திருப்பவா்களுக்கு கேரளாவுக்குள் செல்ல எவ்வித தடையும் விதிப்பதில்லை. உரிய சான்றிதழ் இல்லாதவா்களை மட்டுமே திருப்பி அனுப்பி வைக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com