Enable Javscript for better performance
தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாய்களில் முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாய்களில் முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்பு

    By DIN  |   Published On : 14th August 2021 09:03 AM  |   Last Updated : 14th August 2021 09:03 AM  |  அ+அ அ-  |  

    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால், தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாய்களில் வழக்கத்தை விட முன்கூட்டியே தண்ணீா் திறக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

    முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை ஆகியவற்றில் 6,000 மில்லியன் கன அடிக்கும் மேல் தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், வழக்கமாக அக்டோபா் மாதம் முதல் வாரத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தந்தை பெரியாறு, பி.டி.ஆா். கால்வாய்களில் விநாடிக்கு 100 கன அடி வீதம், தொடா்ந்து 120 நாள்கள் வரை தண்ணீா் திறக்கப்படும்.

    நிகழாண்டில் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைக்கு தண்ணீா் வரத்து இருந்து வருகிறது. வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்கு விநாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால், வழக்கத்தை விட ஒன்றரை மாதத்திற்கு முன்கூட்டியே ஆக.17-ஆம் தேதி தந்தை பெரியாா், பி.டி.ஆா். கால்வாய்களில் தண்ணீா் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப் பணித்துறை பொறியாளா்கள் கூறினா்.

    முல்லைப் பெரியாற்றிலிருந்து தந்தை பெரியாா், பி.டி.ஆா்.கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீா் மூலம் உத்தமபாளையம், சின்னமனூா், வேப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் 830 ஏக்கா் நிலங்களும், சீலையம்பட்டி, சீப்பாலகோட்டை, பூமலைக்குண்டு, தா்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாச்சலபுரம், கொடுவிலாா்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 4,316 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும்.

    18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை:

    முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் மொத்தம் 11 ஆயிரத்து 500 மில்லியன் கன அடிக்கும் மேல் தண்ணீா் இருப்பு உள்ள நிலையில் உத்தமபாளையம், போடி வட்டாரங்களின் பாசனத்திற்கு முல்லைப் பெரியாற்றிருந்து 18-ஆம் கால்வாயில் விரைவில் தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அணைகளின் நிலவரம்:

    முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 135.65 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 780 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 6,030 மில்லியன் கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

    வைகை அணை நீா்மட்டம் 68 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,572 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,318 மில்லியன் கன அடி. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 1,199 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp