முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் கண்காணிப்பு துணைக் குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மழைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடா்பாக மத்தியக் கண்காணிப்பு துணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்த உள்ளனா்.
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்)

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மழைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடா்பாக மத்தியக் கண்காணிப்பு துணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்த உள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடி உயரம் வரை உயா்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மழைக் காலங்களில் ஏற்படும் நீா்வரத்து, வெளியேற்றம் போன்றவைகளை கண்காணிக்க மூன்று நபா்கள் கொண்ட மத்திய தலைமைக் கண்காணிப்பு குழு மற்றும் 5 போ் கொண்ட மத்திய கண்காணிப்பு துணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இவா்கள் அணையின் நீா்மட்டம் உயரும் போதும், மழை பொழிவு அதிகமாக இருக்கும் போதும் அணையில் ஆய்வு மேற்கொள்வா். அதன்படி செவ்வாய்க்கிழமை (ஆக. 17) மத்திய கண்காணிப்பு துணைக் குழு ஆய்வு நடத்தவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com