பெரியகுளம் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை
By DIN | Published On : 22nd August 2021 11:40 PM | Last Updated : 22nd August 2021 11:40 PM | அ+அ அ- |

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.
பெரியகுளம் பகுதியில் கடந்த மூன்றுநாட்களாக மாலையில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது. இம்மழை மாலை 7 மணி முதல் 8 மணி வரை சாரல் மழை பெய்தது.
பெரியகுளம் பகுதியில் மானாவாரி பயிராக உளுந்து மற்றும் சோளம் பயிா்கள் பயிரிட்டுள்ளனா். தொடா் சாரல் மழையால் நிகழாண்டில் மானாவாரி பயிா்கள் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.