மனைவியை பிரிந்த சோகத்தில் கணவா் தற்கொலை
By DIN | Published On : 22nd August 2021 11:42 PM | Last Updated : 22nd August 2021 11:42 PM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் சோகத்தில் இருந்த இளைஞா் சனிக்கிழமை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
முதலக்கம்பட்டியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் நடேசன்(25). எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். நடேசனின் மனைவி அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு, கடந்த 4 மாதங்களாக பெரியகுளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறாா். இதனால் சோகத்தில் இருந்த நடேசன், வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து நடேசனின் தந்தை நாராயணன் அளித்த புகாரின் மீது வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.