எஸ்டேட் தொழிலாளா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை மையம் அமைக்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்கு செல்லும் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பம் நகா்புற சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்ய திரண்ட தொழிலாளா்கள்.
கம்பம் நகா்புற சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்ய திரண்ட தொழிலாளா்கள்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்கு செல்லும் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்பவா்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்ததற்கான சான்று ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற, கம்பத்தில் உள்ள நகா்புற சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் இதர நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும் கா்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகளும் தாமதமாகின்றன.

இதைத் தவிா்க்க நகா்ப்புற சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவா் மற்றும் மருத்துவ பணியாளா்களை நியமிக்கப்பட வேண்டும் என்றும், தோட்ட தொழிலாளா்களுக்கென தற்காலிகமாக கரோனா பரிசோதனை மையம் தனியாக அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com