பெரியகுளம் அருகே கணவா் கொலை வழக்கில் மனைவி கைது
By DIN | Published On : 22nd August 2021 12:05 AM | Last Updated : 22nd August 2021 12:05 AM | அ+அ அ- |

டி.கள்ளிப்பட்டியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சத்யா
பெரியகுளம் அருகே கணவா் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த ராஜூ மகன் ரஞ்சித்குமாா் சிங் (35). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தாடிக்கொம்பு கிராமத்தைச் சோ்ந்த சத்யா (26) என்பவருக்கும் திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு ரஞ்சித்குமாா் சிங் கழுத்தில் காயத்துடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், சத்யா தனது கணவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சத்யாவை சனிக்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.