எல்லைப்பகுதியில் தொழிலாளர்களை சோதனை செய்து அனுப்பிய தமிழக காவல்துறை

கேரளத்திற்கு வேலைக்கு செல்லும் தமிழக மக்களிடம் பரிசோதனை சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என தமிழக காவல்துறை சோதனை செய்து அனுப்புகின்றனர்.
எல்லைப்பகுதியில் தொழிலாளர்களை சோதனை செய்து அனுப்பிய தமிழக காவல்துறை
எல்லைப்பகுதியில் தொழிலாளர்களை சோதனை செய்து அனுப்பிய தமிழக காவல்துறை

கம்பம்: கேரளத்திற்கு வேலைக்கு செல்லும் தமிழக மக்களிடம் பரிசோதனை சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என தமிழக காவல்துறை சோதனை செய்து அனுப்புகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள  தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் நாள்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவர்கள் வேலைக்குச் செல்லும் பொழுது கேரள சோதனைச் சாவடியில் இ பாஸ் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், ஆர்.டி.பி.சி.ஆர்.  சான்றிதழ் போன்றவைகளை கேட்டு சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால் தமிழக தொழிலாளர்கள் எல்லைப் பகுதியில் பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி  ஈடுபட்டு வந்தனர்.

இதனை முன்னிட்டு கேரளாவுக்கு செல்லும் தேனி மாவட்ட தோட்டத் தொழிலாளர்களிடம் இ பாஸ், 2 டோஸ்  தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் உள்ளதா என்று தமிழக எல்லையான கம்பம்மெட்டு மற்றும் குமுளி மலை அடிவாரத்திலேயே காவல்துறை புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.

கேரளாவுக்குள் செல்ல முறையான சான்றிதழை சரி பார்த்த பின்பு அனுமதித்தனர்.

அதன்பேரில் குமுளி வழியாக 25 வாகனங்களில்  ஒரு வாகனத்திற்கு 8 தொழிலாளர்கள் வீதமும் பேருந்துகளில் சுமார் 100 தொழிலாளர்கள் சென்றனர். கம்பம்மெட்டு வழியாக ஒரு வாகனத்திற்கு 8 பேர் வீதம்  20 வாகனங்களில்  ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்

இதுகுறித்து காவல்துறை கூறும்போது, “கேரளம் செல்லும் தோட்ட தொழிலாளர்களை தமிழக எல்லையிலேயே முறையான சான்றிதழ்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து அனுப்பினால் தமிழக கேரள எல்லையில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் சோதனைகள் தொடரும்” என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com