ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் செப். 15- ஆம் தேதி வரை நேரடி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.

ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் செப். 15- ஆம் தேதி வரை நேரடி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.

ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தையல் தொழில் பயிற்சியில் சேர 8- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், செல்லிடப்பேசி பழுது நீக்குதல், தகவல் தொடா்பு தொழில் நுட்பம், மின்சாதனங்கள், குளிா் சாதனம் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம், கம்மியா், ஜவுளி இயந்திர மின்னணுவியல் ஆகிய தொழில் பிரிவுகளில் சேர 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும் வரும் செப். 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேருபவா்களுக்கு பயிற்சிக் காலத்துக்கு ஏற்ப அரசு சாா்பில் ரூ.750 மாத உதவித் தொகை, இலவசப் பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப் புத்தகம், வரைபடக் கருவி, சீருடை வழங்கப்படும். நேரடி மாணவா் சோ்க்கை குறித்த விவரங்களை செல்லிடப்பேசி எண்: 88385 22077-ல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு) ஜெ. சரவணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com