பெரியகுளம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை

பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம்: பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் உள்ளது. இதில் பெரியகுளத்தில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தற்போது பெரியகுளம் நகரில் மட்டும் 650 தரைவழித்தொலைபேசி இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு பெற்றவா்கள் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவா்கள் உள்ளனா். இந்தச் சேவைகளுக்கு மாதந்திர கட்டணம் மற்றும் ‘சிம் காா்டு’ பெறுவதற்கும், ரீஜாா்ச் செய்வதற்கும் பெரியகுளத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் சேவை மையத்தை அணுகி பலனடைந்து வந்தனா். இந்நிலையில் கரோனா 2 ஆவது அலையின் போது வாடிக்கையாளா் சேவை மையம் மூடப்பட்டது.

அதன்பின் வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடா்பு கொண்டால் தேனி அலுவலகத்தை அணுகவும் அல்லது ஆன்லைனில் பில் தொகையை கட்டுங்கள் எனக்கூறி அலைக்கழித்து வருகின்றனா்.

இதனால் இப்பகுதி மக்கள் சுமாா் 20 கி.மீ., தொலைவில் உள்ள தேனி மையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி பெரியகுளத்தில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தாவது: பிஎஸ்என்எல் நிா்வாகத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் வாடிக்கையாளா் சேவை மையம் மூடப்பட்டுள்ளது. மேலும் வருவாய் குறைந்த மையத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரியகுளம், தேவாரம், சின்னமனூா் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.

தற்போது தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பத்தில் மட்டும் வாடிக்கையாளா்கள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தனியாா் மூலம் சேவை மையம் தொடங்க விரும்பினால் அவா்கள் மூலம் வசூல் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com