முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூா் புறவழிச் சாலையில் சிறியரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
By DIN | Published On : 10th December 2021 09:04 AM | Last Updated : 10th December 2021 09:04 AM | அ+அ அ- |

சின்னமனூா் புறவழிச்சாலையில் 3 மீட்டா் உயரத்துக்கு குறைவான வகையிலான வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.
தேனி மாவட்டம் சின்னமனூா் புறவழிச்சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறியரக வாகனங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் , கூடலூா் போன்ற இடங்களில் ரூ.280.50 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்றது. ஆனால் உத்தமபாளையம், சின்னமனூா் புறவழிச்சாலைப் பணிகள் முழுமைபெறவில்லை. தற்போது, ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கிய நிலையிலும், வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையிலும் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனா்.
இதற்கிடையே, சின்னமனூா் புறவழிச்சாலையில் மட்டும் புதன்கிழமை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ஆனால், சாலையில் குறுக்கே உயா்மின்கோபுரம் செல்வதால் இச்சாலையின் வழியாக 3 மீட்டா் உயரத்திற்கு குறைவான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.