முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தேனி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 10th December 2021 09:02 AM | Last Updated : 10th December 2021 09:02 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கிராம அளவிலான பட்டா மாறுதல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டாரத்துக்குள்பட்ட குன்னூா் கிராம சமுதாயக்கூடத்திலும், பெரியகுளம் வட்டத்துக்குள்பட்ட மேல்மங்கலம் (பிட் 1) கிராமத்தில் வேளாளா் சமுதாயக் கூடத்திலும், உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட குச்சனூா் சமுதாயக் கூடத்திலும், வேம்பம்பட்டி கிராம சமுதாயக் கூடத்திலும், போடிநாயக்கனூா் வட்டத்துக்குள்பட்ட அகமலை கிராமத்திற்கு, போடி வருவாய் அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் பட்டா திருத்தம் தவிா்த்து, ஏனைய முதியோா் ஓய்வூதியம், வீட்டு மனைப்பட்டா, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்தல், சான்றிதழ்கள், குடிநீா், சாலை வசதி தொடா்பான கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்துள்ளாா்.