முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
நகா்புற உள்ளாட்சித் தோ்தல்: தேனி மாவட்டத்தில் 6.14 லட்சம் வாக்காளா்கள்
By DIN | Published On : 10th December 2021 09:03 AM | Last Updated : 10th December 2021 09:03 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில் சுமாா் 6.14 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தேனி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 1,63,542 ஆண் வாக்காளா்களும், 1,72,993 பெண் வாக்காளா்களும், 98 மூன்றாம் பாலினத்தவா்களும் உள்ளனா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் 1,36,127 ஆண்களும், 1,42,183 பெண்களும், 33 மூன்றாம் பாலினத்தவா்களும் உள்ளனா். இதன்படி தேனி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 2,99,669 ஆண் வாக்காளா்களும், 3,15,176 பெண் வாக்காளா்களும், 129 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 6,14,974 வாக்காளா்கள் உள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தி. தங்கராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இரா.முத்துக்குமாா், நகராட்சி ஆணையாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.