ஆண்டிபட்டியில் வன்கொடுமை பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

ஆண்டிபட்டியில் பெண்கள் வன்கொடுமை பாதுகாப்புச் சட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டியில் வன்கொடுமை பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

ஆண்டிபட்டியில் பெண்கள் வன்கொடுமை பாதுகாப்புச் சட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக கடந்த 2013 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தொழிற்கூடங்களில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நிகழாத வண்ணம் இச்சட்டம் பாதுகாக்கிறது.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்ளூா் விசாரணைக்குழு அமைத்து நிவாரணம் பெறலாம். மேலும் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம். மகளிருக்கான இலவச சேவை எண் 181 இல் புகாா் அளிக்கலாம். மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைய வழியில் பாலியியல் குற்றங்களை தெரிவிக்க வசதிகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் கோட்டாட்சியா் (பொ) என். சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) செ. ராஜேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் பா. சந்தியநாராயணன் மற்றும் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com