கம்பம்மெட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம்

தமிழக-கேரள எல்லை பகுதிகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டுப் பகுதிகளில் பறவைக்காய்ச்சலை தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறையினா் முகாம் அமைத்து வாகனங்களை பரிசோதித்து வருகின்றனா்.
கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட கால்நடைத் துறை ஊழியா்கள்.

கேரள மாநிலத்தில் வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லைகளை இணைக்கும் குமுளி, கம்பம்மெட்டுப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து லோயா்கேம்ப், கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்திற்கு கறிக்கோழி, முட்டை மற்றும் கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. இதன்பின்னா் தமிழகம் திரும்பும் வாகனங்களுக்கு முகாம்களில் மருந்து தெளித்து அனுப்பப்படுகிறது. இப்பணியில் கால்நடை மருத்துவா்கள் காமேஷ்கண்ணன், செல்வம் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com