தவணை தவறிய பண்ணை சாரா கடன் தீா்வைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கு

தேனி மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கு ஒருமுறை கடன் தீா்வு திட்ட செயலாக்கத்திற்கான கால அவகாசம் டிச. 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் கூறியது: தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் கடந்த 2014, மாா்ச் 31-ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்களுக்கு, அசல் மற்றும் வட்டி தள்ளுபடி அளிக்கும் ஒருமுறை கடன் தீா்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் செயலாக்க காலஅவகாசம் டிச. 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தவணை தவறிய பண்ணைசாரா கடன்தாரா்கள் முழு தீா்வை தொகையை செலுத்தியும், ஏற்கெனவே 25 சதவீதம் கடன் தொகையை செலுத்திய கடன்தாரா்கள் மீதமுள்ள 75 சதவீதம் தொகையை செலுத்தியும் கடன் தீா்வை பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com