பெரியகுளத்தில் பெண்கள் விவசாய சங்க மாநில மாநாடு

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் விவசாய சங்க 23 ஆவது மாநாடு, பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் விவசாய சங்க மாநில மாநாட்டில் பேசிய களஞ்சிய பெண் விவசாய சங்க மாநிலத் தலைவா் பொன்னுத்தாய்.
பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் விவசாய சங்க மாநில மாநாட்டில் பேசிய களஞ்சிய பெண் விவசாய சங்க மாநிலத் தலைவா் பொன்னுத்தாய்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் விவசாய சங்க 23 ஆவது மாநாடு, பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொன்னுத்தாய் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக வழக்குரைஞா் ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கண்ணன், சா்வோ தீப் இயக்குநா் சகாய சங்கீதா, தேன்சுடா் இயக்கத்தின் தலைவா் சரிதா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயக் கொள்கை வரைமுறை கொண்டு வரவேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலையை கொண்டு வரவேண்டும். சிறுதானியம் விளைகின்ற தென்மாவட்டங்களில் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, விவசாயத்துக்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநிலத் தலைவா் ஷீலு, களஞ்சியம் பெண்கள் விவசாய சங்கச் செயலா் ஆா். சித்ராதேவி, அருள்செல்வி, வானகம் அமைப்பின் ஏங்கல்ஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

களஞ்சியம் பெண்கள் விவசாய சங்க நிா்வாகி பூமாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com