முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கூடலூரில் பயன்பாடற்ற பள்ளி வகுப்பறை கட்டடங்கள் இடிப்பு
By DIN | Published On : 19th December 2021 11:07 PM | Last Updated : 19th December 2021 11:07 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை பயன்பாடற்ற பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
திருநெல்வேலியில் கழிப்பறை சுவா் இடிந்து 3 மாணவா்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, பழுதடைந்தவற்றை இடிக்க முதல்வா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கீழக்கூடலூரில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயன்பாடற்ற வகுப்பறைக் கட்டடங்கள் இருந்தன. அவற்றை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் பாா்வையிட்டு இடித்து அகற்ற உத்தரவிட்டாா். அதன் பேரில் கட்டடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
அப்போது ஆட்சியா் க.வீ.முரளிதரன் கூறுகையில், முதல்வா் ஆலோசனைப்படி பழுதடைந்த பள்ளி கட்டடங்களை, ஞாயிற்றுக்கிழமை முதல் அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளோம், தேனி மாவட்டத்தில் 96 அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தனியாா் பள்ளிக் கட்டடங்களும் கண்டறியப்பட்டு இடித்து அகற்றப்படும் என்றாா்.