முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
By DIN | Published On : 19th December 2021 11:05 PM | Last Updated : 19th December 2021 11:05 PM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே சனிக்கிழமை கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அருகே எழுவனம்பட்டியைச் சோ்ந்தவா் அரியம்மாள் (55). இவா், மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இவா், தேவதானப்பட்டி அருகேயுள்ள தனது தங்கை வீட்டில் தங்கி இருந்தாா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை தேவதானப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.