திராட்சை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மற்றும் திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினர்.
திராட்சை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு விழா
திராட்சை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு விழா

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மற்றும் திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினர்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி யில் வீர நாகம்மாள் கோவில் வளாகத்தில் புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி, மீன்கொத்திப் பறவை என்ற நூலை வெளியிட்டார்.

மேலும் தேனி ராஜசேகரன் முள்வேலி முடிச்சுகள் என்ற நூலையும், திமுக செயற்குழு உறுப்பினர் குரு.இளங்கோ,  திக்கெட்டும் திராவிட தீ பரவட்டும் என்ற நூலையும், மாநில முற்போக்கு கலை இலக்கிய மேடை செயலாளர் அம்பிகா குமரன் தொட்டில் குழந்தைகள் என்ற நூலையும்,  5 மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பொன்.காட்சிகண்ணன், களவு போன நிலா என்ற நூலையும்,  தேனி விசாகன் நிழலில் ஒரு கவிஞன் என்ற நூலையும், ரமேஷ், மை சிந்திய கவிதை என்ற நூலையும், பேராசிரியர் கோ.தெய்வநாயகம் திராட்சை ரசம் என்ற நூலையும் வெளியிட்டார்.

திராவிட கண்ணன், வேலு கணேஷ், அழகேசன், பிரசாத் சரவணன் ஆகியோர் புத்தக ஏற்புரையாக பேசினர்.

ஏற்பாடுகளை, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மற்றும் திராட்சைத் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com