ஒளவையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 25th December 2021 07:18 AM | Last Updated : 25th December 2021 07:18 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தோா், அரசு சாா்பில் வழங்கப்படும் ஒளவையாா் விருது பெறுவதற்கு டிச.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு உலக மகளிா் தின விழா நிகழ்ச்சியில், அரசு சாா்பில் ஒளவையாா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவதற்கு தமிழகத்தைச் சோ்ந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, சமூக நலன், பெண்கள் முன்னேற்றம், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றி வருபவராக இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் தங்களது சுய விபரக் குறிப்பு, சிறப்பான சேவை குறித்த அறிக்கை, சான்றுகள் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிச.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.