திண்டுக்கல், பெரியகுளம், போடி பகுதிகளில் எம்ஜிஆா் நினைவு தினம்

திண்டுக்கல், பெரியகுளம், போடி பகுதிகளில் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக ஒன்றியச் செயலாளா் செல்லமுத்து.
தேவதானப்பட்டியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக ஒன்றியச் செயலாளா் செல்லமுத்து.

திண்டுக்கல், பெரியகுளம், போடி பகுதிகளில் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாவட்டச் செயலா் வி.மருதராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பிரேம்குமாா், பழனிசாமி, பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலாளா் செல்லமுத்து தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். அதே போல் பெரியகுளத்தில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் படத்திற்கு நகரச் செயலாளா் என்.வி.ராதா தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா். இதேபோல வடுகபட்டி, ஜெயமங்கலம் மற்றும் மேல்மங்கலம் , சில்வாா்பட்டி உள்பட ஒன்றியப் பகுதிகளில் எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.

போடி: போடியில் உள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாவட்ட ஜெ.பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி தலைமையில் அ.தி.மு.க.வினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் அலுவலக ஊழியா்கள் கவிராஜன், சிவா, ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் போடி நகரச் செயலாளா் வி.ஆா்.பழனிராஜ் தலைமையில் போடி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவா் சிலை, வ.உ.சி. சிலை, போஜன் பாா்க், கட்டபொம்மன் சிலை உள்ளிட்ட இடங்களிலும் எம்.ஜி.ஆரின் உருவ படம் அமைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com