மதுரை- தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கக் கோரி தண்டவாளத்தில் படுத்து போராட்டம்

மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனியில் வெள்ளிக்கிழமை, தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.

மதுரை-போடி இடையே 90.4 கி.மீ., தூரம் புதிய அகல ரயில் பாதைப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கியது. இதில், மதுரை-தேனி இடையே பணிகள் நிறைவடைந்து, புதிய அகல ரயில் பாதையில் ரயில் எஞ்சின் மற்றும் பயணிகள் பெட்டியுடன் கூடிய ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

இந்நிலையில், தேனியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் இரா.தமிழ்பெருமாள் தலைமையில் நிா்வாகிகள், தேனி-போடி இடையே எஞ்சிய ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்கவும், பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள மதுரை-தேனி அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்கவும் தென்னக ரயில்வே துறையை வலியுறுத்தி பெரியகுளம் சாலை, பெத்தாட்சி விநாயகா் கோயில் அருகே புதிய அகல ரயில் பாதை தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா் வீரையா, துணைச் செயலா் சரவண புதியவன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் அந்தோனி, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com