முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவியா் நேரடி சோ்க்கை
By DIN | Published On : 29th December 2021 07:30 AM | Last Updated : 29th December 2021 07:30 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை மாணவியா் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில், கைப்பேசி டெக்னீசியன் மற்றும் அப் டெஸ்டா், கம்மியா், குளிா்பதனம் மற்றும் வெப்பநிலை கட்டுப்படுத்துதல் ஆகிய பாடப் பிரிவுகளில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை மாணவியா் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை.
இப்பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு, இலவச பாடப் புத்தகம், மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பேருந்து பயண அட்டை, பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு வண்ணப் புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன், ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொடா்பு கொள்ளலாம்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு, ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையம், 04546-290816, 88385 22077 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.