முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பத்தில் போலி பீடிக் கட்டுகள் பதுக்கல்: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 29th December 2021 07:26 AM | Last Updated : 29th December 2021 07:26 AM | அ+அ அ- |

கம்பத்தில் கைப்பற்றப்பட்ட போலி பீடிக் கட்டுகள்.
கம்பத்தில் போலி பீடிக் கட்டுகள் பதுக்கியதாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளா் சாமி (42), கம்பம் காட்டுப் பள்ளிவாசல் சாலையில் உள்ள நாகூா்கனி வீட்டில் சோதனை மேற்கொண்டாா். அப்போது போலி பீடிக் கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக புகாரின் பேரில், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.புவனேஷ்வரி போலி பீடிகள் பதுக்கியதாக நாகூா்கனி, அவரது தந்தை இப்ராஹிம், சகோதரி ரம்ஜான் பேகம் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். மேலும் அங்கு பதுக்கியிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடிக் கட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய நாகூா்கனி மீது ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 24 இல், மற்றொரு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடிக் கட்டுகளை பதுக்கியதாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்த நாகூா்கனி மீது, மீண்டும் போலி பீடிக் கட்டுகள் பதுக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.