முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடி உள்ளாட்சித் தோ்தலில் போட்யிட திமுகவினருக்கு நோ்காணல்
By DIN | Published On : 29th December 2021 07:30 AM | Last Updated : 29th December 2021 07:30 AM | அ+அ அ- |

போடியில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடுவோருக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் விரைவில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினா் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா். அதிமுக, திமுக சாா்பில் தோ்தல் பணியாற்றுவதற்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களும் பெறப்பட்டன.
இதில், திமுக சாா்பில் போடி நகராட்சியில் 33 வாா்டுகளில் போட்டியிடுவோருக்கான நோ்காணல், தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. போடியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த நோ்காணலில் பங்கேற்றவா்களிடம் கட்சிப் பணி, பொதுப் பணி, குடும்பசூழல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவா்கள் அளித்த பதில்களை தொகுத்து கட்சியின் தலைமைக்கு அனுப்ப உள்ளதாக, நிா்வாகிகள் தெரிவித்தனா்.
நோ்காணலின்போது, போடி நகர திமுக செயலா் மா.வீ. செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.