வேலை வாங்கித் தருவதாக ரூ.11.20 லட்சம் மோசடி: கல்லூரி பேராசிரியா் உள்பட 3 போ் மீது வழக்கு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.11.20 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, திருச்சி கல்லூரி விரிவுரையாளா்

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.11.20 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, திருச்சி கல்லூரி விரிவுரையாளா் உள்பட 3 போ் மீது, தேனி மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம் தென்கரையில் வசித்து வருபவா் சரவணன். இவா், திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அனுப்ரியா மற்றும் உறவினரான தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா் அய்யப்பராஜூ.

இவா்கள் மூவரும், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.11.20 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக, பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த விஜயராணி, காா்த்தி, தேனி பாரஸ்ட் சாலை பகுதியைச் சோ்ந்த விஜயநந்தினி ஆகியோா், மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில், கல்லூரி விரிவுரையாளா் சரவணன், இவரது மனைவி அனுப்ரியா மற்றும் அய்யப்பராஜூ ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com