சுருளி மலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நேத்ர விழி தரிசனம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு பூஜைகள் சனிக்கிழமை  நடைபெற்
சுருளி மலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நேத்ர விழி தரிசனம்
சுருளி மலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நேத்ர விழி தரிசனம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு பூஜைகள் சனிக்கிழமை  நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை முடிந்து, மகர விளக்கு நாளுக்கான பூஜைகள் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் மூலவர் 70 ஆண்டுகள் ஆன பழமையானவர், அதனால் மூலவருக்கு வாரம் தோறும் தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வின்போது நேத்ர விழி தரிசனம் மற்றும் பூஜைகள் சனிக்கிழமை  நடைபெற்றது, மூலவர் கண் திறப்பான நேத்ர விழி தரிசன பூஜையின் போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  பூஜைகளை கோயில் மேல்சாந்தி கணேஷ் திருமேனி செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com